மாயை மாயை தான் எல்லாம் மாயை தான் - Pullai Pol Ularnthidum Vaazhkkai

மாயை மாயை தான் எல்லாம் மாயை தான்

மாய லோகமாய் இவ்வுலகில்

நேற்று வாழ்ந்தவர் இன்று இல்லையே

நாளை நடப்பதை நாம் அறியோம்

புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை

பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை - 2

புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லை

நிலையான வாழ்வு இங்கே இல்லை - 2

புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை

பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை

பிறக்கும் போதும் இறக்கும் போதும்

மனிதன் கரங்களில் ஒன்றும் இல்லை

கொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லை

கண்கள் காண்பதின்றி பெலன் இல்லை

போதும் என்கிற மனதுடனே

தேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம் - 2

நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்

இயேசுவை அனுதினம் தேடிடுவோம் - 2 - புல்லை

நாளை என்பது நமது அல்ல

நமது ஜீவன் நம் கையில் அல்ல - 2

நல்வராம் நம் இயேசுவிடம்

நமது வாழ்வினைக் கொடுத்திடுவோம் - 2 - புல்லை

உலகம் அனைத்தையும் சொந்தமாக்கியும்

நமது ஜீவனை நாம் இழந்தால்

லாபம் ஏதும் இல்லை மேன்மை ஒன்றும் இல்லை

வாழ்ந்த வாழ்க்கையால் பயன் இல்லை

அகிலம் அனைத்திற்கும் ஆண்டவராய்

(நம்) இயேசு ஒருவரே இரட்சகராய் - 2

வழியாய் ஒளியாய் வந்தவரை

உள்ளத்தில் ஏற்றிட உறுதிகொள்வோம் - 2

புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை

பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை - 2

புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லை

நிலையான வாழ்வு இங்கே இல்லை - 2 - புல்லை